கனடாவில் கோவிட் தடுப்பு வில்லைகளை பயன்படுத்துவதற்கு அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலை கொள்ளளவை பாதிக்கும் அளவிற்கு நோயாளர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக பல்கலைக்கழக வைத்தியசாலை வலையமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி டொக்டர் கெவின் ஸ்மித் தெரிவித்துள்ளார்.
ஒமிக்ரோன் திரிபினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் சிகிச்சை அளிப்பதற்காகு முழு வளங்களையும் பயன்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
வீதி விபத்துக்கள், இருதய நோய்கள், மாரடைப்பு, பக்கவாதம் உள்ளிட்ட ஏனைய மருத்துவ அவசர தேவைகளின் போதும் சிகிச்சை அளிப்பதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட வேண்டுமென தெரிவித்துள்ளார்.
எனவே கோவிட் தடுப்பு ஊசிக்கு பதிலீடாக இந்த வில்லைகளை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென கோரியுள்ளார்.