பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரை அடிப்படையாக கொண்ட எல்லைகள் இல்லா நிருபர்கள் என்ற சர்வதேச அமைப்பு ஒன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது. அதில், தங்களுடைய பணிகளின் நிமித்தம் உலகம் முழுவதும் 488 பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என தெரிவித்து உள்ளது.
கடந்த 1995ம் ஆண்டில் இருந்து இந்த ஆவண பதிவு நடந்து வருகிறது. எனினும், இதுவரை இல்லாத வகையில் முதன்முறையாக, கடந்த 2021ம் ஆண்டில் உலகம் முழுவதும் அதிக அளவில் பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இவற்றில், சீனா (127) முதல் இடம் வகிக்கிறது. இதனை தொடர்ந்து, மியான்மர் (53), வியட்னாம் (43) மற்றும் பெலாரஸ் (32) ஆகியவை உள்ளன. உலகம் முழுவதும் சர்வாதிகார போக்கின் பிரதிபலிப்பு இது என்று அந்த குழுவின் பொது செயலாளர் டெலாயர் வருத்தம் தெரிவித்து உள்ளார்.