கியூபெக் மாகாணத்தின் வைத்தியசாலையொன்றில் 450 மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கோவிட் தொற்று உறுதியாகியுள்ளது.
கிழக்கு கியூபெக் பகுதியில் அமைந்துள்ள CHU de Quebec-Universite Laval. வைத்தியசாலையில் இவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான ஊழியர்கள் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் 443 பேர் வைரஸ் தொற்றுக்கு இலக்காகி உள்ளதாகவும், 400க்கும் மேற்பட்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்த வைத்தியசாலை நிறுவனம் சுமார் 2 மில்லியன் பேருக்கு சேவைகளை வழங்கி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.