Home கனடா பூர்வகுடியின சிறார்களின் நலன்புரிக்காக 40 பில்லியன் டொலர் ஒதுக்கம்

பூர்வகுடியின சிறார்களின் நலன்புரிக்காக 40 பில்லியன் டொலர் ஒதுக்கம்

by Jey

பூர்வகுடியின சிறார்களின் நலன்புரிக்காக சுமார் நாற்பது பில்லியன் டொலர் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக லிபரல் அரசாங்கம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

பூர்வகுடியின சிறர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளுக்கான நட்டஈடாக இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

பூர்வகுடியின சமூகத்தினருடன் கலந்தாலோசனை செய்து இந்த தொகையை அசராங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

20 பில்லியன் டொலர்கள் நட்டஈடாக வழங்கப்பட உள்ளதுடன், 20 பில்லியன் டொலர்கள் எதிர்காலத்தில் தவறுகள் இழைக்கப்படுவதனை தவிர்க்கவும் மறுசீரமைப்புக்களை மேற்கொள்ளவும் பயன்படுத்தப்பட உள்ளது.

பூர்வகுடியின சிறார்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் உரிய முறையில் வழங்கப்படவில்லை எனவும் இதன் மூலம் அவர்கள் ஒடுக்கமுறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

1991ம் ஆண்டின் பின்னர் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வளர்ந்த பூர்வகுடியின சிறார்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளது.

related posts