இலங்கை கடற்படையினர், அவ்வப்போது, இந்திய மீனவர்களை தாக்கும் சம்பவங்களும், அவர்களை சிறை பிடிக்கும் சம்பவங்களும் நிகழும்.
சுமார் 15 நாட்களுக்கு முன் கூட, கச்சத்தீவு அருகே மீன் பிடித்துக்கொண்டிருந்த ராமேஸ்வரம் மற்றும் மண்டபத்தை சேர்ந்த 55 மீனவர்களை இலங்கை கடற்படையினர் சிறை பிடித்தனர். இலங்கை கடற்படையினரின் இந்த செயலுக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், நேற்று ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500க்கும் மேற்பட்ட விசைப்படகில் சுமார் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர்.மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை மீன் பிடிக்க முடியாமல் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்ததோடு அவர்கள் மீது கற்களை கொண்டு வீசி தாக்கியுள்ளனர்.
இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க முடியாமல் மீனவர்கள் பயந்து உடனடியாக நாலாபக்கமும் சிதறி ஓடினர். இதன் காரணமாக படகு ஒன்றுக்கு பத்தாயிரம் முதல் 50,000 வரை நஷ்டத்துடன் கரை திரும்பினார். இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டு சிறையில் இருந்த மீனவர்கள் 12 பேர் நேற்று விடுதலை செய்யப்பட்ட நிலையில், இந்த விரட்டி அடிப்பு சம்பவம் மீனவர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, உடனடியாக இந்திய அரசு இலங்கை அரசுடன் பேசி தமிழக மீனவர்கள் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.