சான் டியாகோ:அமெரிக்க கடற்படை வரலாற்றில் முதல்முறையாக, அந்நாட்டின் அணு ஆயுதம் தாங்கி கப்பலான, யு.எஸ்.எஸ்., ஆபிரஹாம் லிங்கனுக்கு, பெண் ஒருவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்க கடற்படையில், 20ம் நுாற்றாண்டு துவக்கத்தில் செவிலியர்கள் பணிக்கு பெண்கள் சேர அனுமதிக்கப்பட்டனர். இரண்டாம் உலகப் போரின் போது, ராணுவத்தில் பெண்கள் சேவையாற்றுவது அதிகரித்தது.
கடற்படைக்கு சொந்தமான விமானங்களை 1974 முதல் பெண்கள் இயக்க துவங்கினர். போர் கப்பல்களை 1994 முதல் பெண்கள் இயக்க துவங்கினர்.அமெரிக்க கடற்படை வரலாற்றில், அணு ஆயுதம் தாங்கி போர் கப்பல்களுக்கு பெண்கள் தலைமை வகித்தது இல்லை. இந்த சாதனை தற்போது முறியடிக்கப்பட்டுஉள்ளது.ஃ
யு.எஸ்.எஸ்., ஆபிரஹாம் லிங்கன் என்ற அணு ஆயுதம் தாங்கி போர் கப்பலுக்கு, ஏமி பார்ன்ஷிமிட் என்ற பெண் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.இவர் இந்த கப்பலின் செயல் அதிகாரியாக, 2016 – 19 வரை பணியாற்றினார்.