ஒன்றாரியோ மாகாணத்தில் கோவிட் மரணங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
கடந்த மே மாதத்தின் பின்னர் முதல் தடவையாக மாகாணத்தில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
மேலும் தற்பொழுது மாகாணத்தில் 2279 கோவிட் தொற்று உறுதியாளர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளில் 319 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் பெற்று வருவதாகக் குறிப்பிடப்படுகின்றது.
கடந்த புதன்கிழமை 4 வயதுக்கும் குறைந்த சிறு பிள்ளையின் மரணமொன்றும் பதிவாகியுள்ளது.