மாகாணங்கள் தடுப்பூசியை கட்டாயமாக்குவது குறித்து கவனம் செலுத்த வேண்டுமென கனேடிய சுகாதார அமைச்சர் Jean-Yves Duclos தெரிவித்துள்ளார்.
கோவிட் பெருந்தொற்று அலை தீவிரமடைந்து செல்வதாகவும் இதனால் மாகாணங்கள் தடுப்பூசியை கட்டாயமாக்க வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சமூக இடைவெளி, பரிசோதனைகள், பாதுகாப்பு அங்கிகள் உள்ளிட்டன குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி ஏற்றப்படாதவர்கள், கனேடிய வைத்தியசாலைகளில் அதிகளவில் அனுமதிக்கப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.