விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டமை குறித்து ஈரானுக்கு எதிரகா நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களது குடும்பத்தினர் கோரியுள்ளனர்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் ஈரானிய எல்லைப் பகுதியில், உக்ரேய்ன் சர்வதேச விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது.
இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் ஈரானுக்கு எதிரான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென கோரியுள்ளனர்.
ஈரானிய அதிகாரிகளுக்கு எதிராக தடைகள் விதிக்கப்பட வேண்டுமெனவும், பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தாங்கள் பொறுமையிழந்துள்ளதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமெனவும் உறவினர்கள் கோரியுள்ளனர்.
இந்த விமான விபத்தில் 176 பேர் கொல்லப்பட்டதுடன் இதில் 140 பேர் வரையில் கனடாவுடன் தொடர்புடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.