Home உலகம் பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த 72 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்

பாகிஸ்தானில் ஹிந்து மதத்தைச் சேர்ந்த 72 ஏழை ஜோடிகளுக்கு திருமணம்

by Jey

பாகிஸ்தானில் இயங்கி வரும் ஒரு ஹிந்து அமைப்பு, ஹிந்து மதத்தைச் சேர்ந்த 72 ஏழை ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைத்தது.

நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ‘பாகிஸ்தான் ஹிந்து கவுன்சில்’ என்ற ஹிந்துக்களுக்கான அமைப்பு இயங்கி வருகிறது. இதன் தலைவரான ரமேஷ் குமார் வான்குவாணி, ஹிந்து மதத்தைச் சேர்ந்த ஏழை மக்களுக்காக பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.

கராச்சியில் உள்ள ரயில்வே மைதானத்தில் இந்த அமைப்பு சார்பில், ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த 72 ஜோடிகளுக்கு நேற்று முன்தினம் திருமணம் செய்து வைக்கப்பட்டது. அனைத்து ஜோடிகளுக்கும், வெள்ளி நகைகள், சமையல் பாத்திரங்கள், காசோலை உள்ளிட்டவை வழங்கப்பட்டன.

பாகிஸ்தானில் 44 லட்சத்திற்கும் அதிகமான ஹிந்துக்கள் சிறுபான்மையினராக வசித்து வருகின்றனர்.

related posts