Home இந்தியா கடன் மறுக்கப்பட்டதால் வங்கிக்கு தீ வைப்பு

கடன் மறுக்கப்பட்டதால் வங்கிக்கு தீ வைப்பு

by Jey

கடனுதவி நிராகரிக்கப்பட்டதால் மனமுடைந்த ஒருவர், கர்நாடகா மாநிலம் ஹாவேரி மாவட்டத்தில் உள்ள பியாடகி தாலுகா அருகே ஹெடிகொண்டா கிராமத்தில் சனிக்கிழமை இரவு வங்கிக்குள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துள்ளார்.

வங்கிக்கு தீ வைத்தது தொடர்பாக ரட்டிஹள்ளியைச் சேர்ந்த வாசிம் அக்ரம் முல்லா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வங்கியில் தீ வைத்துவிட்டு தப்பியோடியபோது கிராம மக்களால் பிடிக்கப்பட்டார்.

இருப்பினும், வங்கியை எரித்ததில் வங்கியில் பணியாற்றும் நபர்களின் பங்கு இருப்பதாக கிராம மக்கள் குற்றம் சாட்டியதால் இந்த சம்பவத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இது ஆவணங்களை அழிக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட திட்டமிட்ட செயல் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

கடன் மறுக்கப்பட்டதால் வங்கிக்கு தீ வைத்ததாக வாசிம் போலீசாரிடம் கூறியதாக கூறப்படுகிறது, ஆனால் கிராம மக்கள் வங்கியில் உள்ளவர்களுக்கும் பங்குன் இருப்பதாக சந்தேகிக்கின்றனர்.

related posts