Home உலகம் பயங்கரவாதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகுக்கே சவாலாக உள்ளது

பயங்கரவாதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகுக்கே சவாலாக உள்ளது

by Jey

பயங்கரவாத செயல்களுக்கு மன்னிப்பு அளிப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை’ என, இந்தியா தெரிவித்துள்ளது.

ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் தற்காலிக உறுப்பினராக இந்தியா கடந்த ஆண்டு முதல் இருந்து வருகிறது. இந்த ஆண்டு டிச., 31ம் தேதியுடன் இந்த பதவிக் காலம் முடிகிறது. பாதுகாப்பு கவுன்சிலின் துணை அமைப்பான பயங்கரவாத தடுப்பு குழுவின் தலைவராக இந்தியா பொறுப்பேற்றுள்ளது.

இந்நிலையில் ஐ.நா.,வுக்கான இந்தியாவின் நிரந்தர துாதர் திருமூர்த்தி கூறியதாவது: பயங்கரவாதம் இந்தியாவுக்கு மட்டுமின்றி உலகுக்கே சவாலாக உள்ளது.

மனித நேயத்துக்கும், அமைதிக்கும் எதிரியாக உள்ளது.பயங்கரவாத தடுப்பு குழுவின் தலைவர் என்ற முறையில் பயங்கரவாதத்தை அடியோடு ஒழிக்க, இந்தியா முயற்சி செய்யும்.

பயங்கரவாத செயல்களை மன்னிப்பது என்ற பேச்சுக்கே இடம் இல்லை; இதில் இந்தியா உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மற்றும் அமைப்புகளை தனிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

related posts