Home சினிமா நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்

நேவாலிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் சித்தார்த்

by Jey

நடிகர் சித்தார்த், விமர்சனம் என்ற பெயரில் அவ்வப்போது அநாகரீகமான வகையில், ட்விட்டரில் பதிவிட்டு சிக்கிக் கொள்வது வழக்கம். கடந்த சில ஆண்டுகளாகவே, விமர்சனம் என்ற பெயரில், அநாகரீமான வகையில் பதிவிடுவதால், அவ்வப்போது சர்ச்சையில் மாட்டிக் கொள்கிறார்.

அந்த வகையில், ஒலிம்பிக் பதக்கம் வென்ற சாய்னா நேவால் (Saina Nehwal) ட்விட் ஒன்றுக்கும் சித்தார்த் (Actor Siddharth) சர்ச்சைக்குரிய வகையில் பதில் பதிவு செய்திருந்ததயார். இது அவரை சிக்கலில் சிக்க வைத்தது.

எந்த நாட்டின் பிரதமரின் பாதுகாப்பு சமரசம் செய்யப்பட்டால், அந்த நாடு தன்னை பாதுகாப்பாக இருப்பதாக கூறிக்கொள்ள முடியாது. பிரதமர் மோடி மீது அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவாக கண்டனம் செய்கிறேன் என ஒலிம்பிக் பதக்கம் வாங்கிய சாய்னா நெய்வால் (Saina Nehwal) ட்வீட் செய்திருந்தார். அதற்கு பதிலை பதிவு செய்த நடிகர் சித்தார்த், பெண்களை கொச்சை படுத்தும் வகையில் பதிலளித்திருந்தார்.

 

இதை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்ட தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா டிஜிபிக்கு கடிதம் எழுதி, விளையாட்டு வீராங்கணை சாய்னா நேவாலுக்கு, ஆட்சேபிக்கத்தக்க வகையில், பெண்களை அவமானபடுத்தும் வகையில் வெறுப்பு ட்வீட் செய்ததற்காக நடிகர் சித்தார்த் மீது இந்திய குற்றவியல் சட்ட பிரிவு 354 ஏ (பாலியல் துன்புறுத்தல்) மற்றும் ஐடி சட்டத்தின் பிரிவு 67 (ஆபாசமான விஷயங்களை வெளியிடுதல்) ஆகியவற்றின் கீழ் எஃப்ஐஆர் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.

மேலும், இதனை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொண்டுள்ள தேசிய பெண்கள் ஆணையத்தின் தலைவர் ரேகா ஷர்மா, நடிகரின் ட்விட்டர் கணக்கை முடக்க வேண்டும் எனவும், சாய்னா நெய்வாலின் பதிவிற்கு, ஆட்சேபிக்கத்தக்க வகையில் பதிவிட்டதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டு, புகார்களை கையாளும் அதிகாரிக்கும் பதிவிட்டு இருந்தார்.

சித்தார்த்தின் இந்த பதிவுக்கு பல்வேறு தரப்பினர்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்திருந்தனர். சித்தார்த்தின் இந்த பதிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ள தேசிய மகளிர் ஆணையம், மகாராஷ்டிரா காவல்துறையிடம் புகார் அளித்துள்ளது.

இந்நிலையில் தற்போது உங்கள் ட்வீட்டில் பதிவிட்ட, சரியாக புரிந்து கொள்ளப்படாத எனது நகைச்சுவைக்கு மன்னிப்பு கோருகிறேன் என்று சித்தார்த் ட்விட்டரில் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்ட மன்னிப்புக் கடிதத்தில் கூறியிருப்பதாவது.,

அன்புள்ள சாய்னா,
எனது முரட்டுத்தனமான நகைச்சுவைக்காக உங்களிடம் மன்னிப்பு கோருகிறேன். நான் உங்களிடமிருந்து பல்வேறு கருத்துகளிலும் வேறுபட்டிருக்கலாம். உங்கள் ட்வீட்டைப் படித்தபோது எனக்கு கோபமும், ஏமாற்றமும் ஏற்பட்டிருக்கலாம். அதற்காக எனது வார்த்தைகளை நியாயப்படுத்த முடியாது. உண்மையில் நான் இதைவிட இரக்கம் கொண்டவனே.

related posts