உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்ற Statue of Unity, உத்தராயணம் அதாவது பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது…
தற்போது, உத்தராயணத்தை (Pongal Festival 2022) முன்னிட்டு உலகின் மிக உயரமான இந்தச் சிலை, விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு வண்ணமயமாக காட்சி அளிக்கிறது. அதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி, பலரால் பகிரப்படுகிறது.
‘உத்தர்’ என்றால் வடமொழியில் வடக்கு என்றும் ‘அயனம்’ என்றால் வழி என்றும் பொருள் ஆகும். சூரியன் தெற்கு திசையிலிருந்து வடக்கு திசை நோக்கி பயணம் செய்யும் காலத்தை உத்தராயணம் என்று சொல்கிறோம். தமிழ் மாதங்களில், தை, மாசி,பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி ஆகிய ஆறு மாதங்களும் உத்தராயண காலமாகும்.
குஜராத் மாநிலம் நர்மதா மாவட்டத்தில், சர்தார் சரோகவர் அணை பகுதியில் கட்டப்பட்டுள்ள, பிரமாண்ட Statue of Unity சர்தார் வல்லபாய் படேல் சிலை உலகிலேயே மிகவும் பெரியது.
இந்த அற்புதமான சிலையைக் காண, நாள் தோறும், 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர்.
உலகிலேயே மிக உயரமான சிலை என்ற பெருமையை பெற்றுள்ள இந்த சிலையை சுற்றி ஏராளான இயற்கை, செயற்கை நீர் நிலைகள் உள்ளன. சர்தார் சரோவர் அணை நிரம்பினால், அதிலிருந்து வெளியேற்றப்படும் நீர், இந்த நீர் நிலைகளில் சேகரிக்கப்படுகிறது.