கனடாவில் பைசர் மாத்திரை பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்படுவதாக அறிவிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பொதுச் சுகாதார திணைக்களம் இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
கனடாவில் ஒமிக்ரோன் பரவுகை தீவிரமடைந்து செல்லும் நிலையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நோய்த் தொற்று உறுதியாளர் எண்ணிக்கை அதிகரிப்பினை கட்டுப்படுத்துவதற்கு இந்த புதிய மாத்திரையை பயன்படுத்த முடியும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
புதிய மாத்திரை நோயின் பாரதூர தன்மையை கட்டுப்படுத்தும் என கனடாவின் பிரதம பொதுச் சுகாதார அதிகாரி திரேசா டேம் தெரிவித்துள்ளார்.
18 வயதுக்கும் மேற்பட்ட நோய்த் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் இந்த மாத்திரையை பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.