கனடாவிலிருந்து ஒமிக்ரோன் திரிபு பரவியதாக சீனா சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் கேலிக்குரியது என கனேடிய அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
சீனாவின் பெய்ஜிங் நகரைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு கனடாவிலிருந்து அனுப்பி வைக்கப்பட்ட தபால் அல்லது தபால் பொதி மூலம் ஒமிக்ரோன் திரிபு பரவியதாக சீன சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
எனினும், இந்தக் குற்றச்சாட்டு எவ்வித அடிப்படையற்றது என்பதுடன் கேலிக்குரியது என கனேடிய அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கனடாவிலிருந்து ஹொங்கொங் வழியாக சீனாவிற்கு அனுப்பி வைக்கப்பட்ட கடிதம் அல்லது தபால் பொதியில் இந்த ஒமிக்ரோன் திரிபு கட்டத்தப்பட்டதாக சீன அரச ஊடகமொன்று கடந்த 7ம் திகதி தகவல் வெளியிட்டிருந்தது.
தபால் மூலம் கோவிட் தொற்று பரவக்கூடிய சாத்தியங்கள் மிகவும் குறைவானது என உலக சுகாதார ஸ்தாபனமும், கனேடிய தபால் திணைக்களமும் தெரிவித்துள்ளன.
வைரஸ் தொற்று ஏதெனும் மேற்பரப்புக்களில் நீண்ட நேரம் உயிர்ப்புடன் இருக்காது என்பதே விஞ்ஞானிகளின் வாதமாக காணப்படுகின்றது.