Home இந்தியா கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் 1000 பானைகளில் பொங்கல்

கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் 1000 பானைகளில் பொங்கல்

by Jey

சிவகங்கை மாவட்டம், நாட்டரசன்கோட்டை கண்ணுடையநாயகி அம்மன் கோயிலில் செவ்வாய் பொங்கல் (Pongal celebration) விழாவை முன்னிட்டு, ஆயிரத்துக்கும் மேற்பட்ட பானைகளில் பொங்கல் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர்.

பொங்கல் விழாவை முன்னிட்டு, அம்மனுக்கு தைலம், திருமஞ்சனம், மஞ்சள், பால், பஞ்சாமிர்தம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருள்களால் அபிஷேகம் நடத்தப்பட்டு, தங்க அங்கி அணிவிக்கப்பட்டது. தொடர்ந்து, அம்மனுக்கு சிறறப்பு விசேஷ தீபாராதனைகள் நடைபெற்றறன.

அதன்பின்னர், கோயிலைச் சுற்றி ஒரே வரிசையில் அமைக்கப்பட்ட அடுப்புகளில் பொங்கல் வைக்கும் நிகழ்வு நடைபெற்றறது. இதில், நாட்டரசன்கோட்டை நகரத்தார் சமூகத்தின் சார்பில் 918 பானைகளில் பொங்கல் வைக்கப்பட்டது.

தொடர்ந்து, அம்மன் தங்க ரதத்தில் எழுந்தருளி கோயிலைச் சுற்றி வலம் வந்தார் வீதி உலா எழுந்தருளினார். அப்போது, ஒவ்வொரு பொங்கல் பானைக்கு உரிய குடும்பத்தினரும் அம்மனுக்கு மாலை சாற்றியும், அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.

இவ்விழாவில், சிவகங்கை, காளையார்கோவில், நாட்டரசன் கோட்டை, காரைக்குடி, மானாமதுரை, ராமநாதபுரம், மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமானோர் வந்திருந்து கலந்துகொண்டனர்.

மேலும், ஆஸ்திரேலியா, துபாய், மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா ஆகிய நாடுகளிலிருந்து 50க்கும் மேற்பட்டோர் வந்திருந்து வழிபட்டனர்.

முன்னோர் வழியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நிறைவுற்றவுடன் வரும் முதல் செவ்வாய்க்கிழமை கண்ணுடையநாயகி அம்மனுக்கு பொங்கல் (Pongal celebration) வைத்து வழிபட்டு வருகிறோம் என்று நாட்டரசன்கோட்டையைச் சேர்ந்த நகரத்தார்கள் கூறுகின்றனர்.

 

ஒரு குடும்பத்தில் எத்தனை பேருக்கு திருமணம் நடைபெற்றிருந்தாலும், அத்தனை பானைகளில் பொங்கல் வைப்பது சிறப்பு இதனை ஒரு புள்ளி என்போம் என்று அவர்கள் கூறுகின்றனர்.

இவ்விழாவினை திருமணமாகாதவர்களுக்கு வரன் பார்ப்பது இவ்விழாவின் மூலம் ஒருவரை ஒருவர் சந்திக்க வைத்து பழக்கத்தை ஏற்படுத்துவது நீண்டநாள் சந்திக்க நேராமல் இருந்த உறவினர்களை சந்திப்பது என பல்வேறு நிகழ்வுகளை ஏற்படுத்துவதற்காக இவ்விழா கடைபிடிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு நகரத்தார் சார்பில் 918 பொங்கல் பானைகளிலும், கண்ணுடைய நாயகி அம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்டவர்களும் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

related posts