டார்லிங் என்ற திரைப்படம் மூலம் கதாநாயகியாக தமிழ் திரையில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. பல்வேறு படங்களில் நடித்து பிரபலமான நடிகை நிக்கி கல்ராணி நடிகர் மற்றும் இயக்குனருமான சசிகுமார் உடன் ராஜவம்சம் என்ற படத்தில் கடைசியாக நடித்துள்ளார்.
இந்நிலையில் ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் தங்கி வரும் நடிகை நிக்கி கல்ராணி (Nikki Galrani) , அண்ணாசாலை காவல்நிலையத்தில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில் ராயப்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருவதாகவும், வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்பவரை நியமித்து இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஜனவரி 11ஆம் தேதி, வீட்டு வேலை பார்க்கும் தனுஷ் சந்தேகத்திற்கு இடமாக மறைத்து சில பொருட்களை எடுத்துச் செல்வதைக் கண்ட தாகும் தெரிவித்துள்ளார். பின் வீட்டில் சோதனை செய்தபோது விலை உயர்ந்த கேமரா மற்றும் 40 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் துணிகள் பொருட்கள் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதனையடுத்து தன் வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் திருடிச் சென்றுள்ளார் (Theft Case) என்ற அடிப்படையில் புகாரை அளித்துள்ளார். இந்நிலையில் திடீர் திருப்பமாக அதே அண்ணாசாலை காவல் நிலையத்தில் நிக்கி கல்ராணி மீது வீசி பிரமுகர் ஒருவர் புகார் ஒன்றை அளித்துள்ளார். நடிகை நிக்கி கல்ராணி வீட்டில் வேலை பார்க்கும் தனுஷ் என்பவரை பொருட்களை திருடியதற்காக சட்டவிரோதமாக அடைத்து வைத்துள்ளார்கள் என்றும், தனுஷின் பெற்றோர்கள் தன்னிடம் உதவி கேட்டு உள்ளார்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து கடந்த 13ஆம் தேதி தனுஷின் தாய் நாகவல்லி மற்றும் தந்தை இருவரும் விருதாச்சலத்தில் இருந்து சென்னை வந்தடைந்தனர். தன் மகனை காணவில்லை என்ற புகாரையும் அண்ணாசாலை காவல்நிலையத்தில் அளித்துள்ளனர். தன் மகன் இருக்கும் இடத்தையும் வேலைப்பார்க்கும் நிறுவனத்திலும் விசாரணை செய்து விட்ட பிறகுதான் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து அண்ணாசாலை போலீசார் நிக்கிகல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அதில் தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டதில் திருப்பூரில் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து திருப்பூரில் மறைந்திருந்த தனுஷ் போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் விலை உயர்ந்த கேமராவை நடிகை நிக்கி கல்ராணி வீட்டிலிருந்து திருடியதாக கோயம்புத்தூரில் ஒரு கடையில் விற்பனை செய்துவிட்டு திருப்பூரில் நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பிடிபட்ட தனுஷ் சென்னை அழைத்து வரும் பணியில் அண்ணாசாலை போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் திடீரென நடிகை நிக்கிகல்ராணி தனுஷ் மீது கொடுத்த புகாரை வாபஸ் பெற திட்டமிட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவித்துள்ளனர். இந்த புகார் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.