தடுப்பூசி ஏற்றுவதற்கு தகுதியான 20 சதவீதத்திற்கும் குறைவானவர்கள் இன்னும் தடுப்பூசி போடப்படாத நிலையில், நாட்டில் ஓமிக்ரான் மாறுபாடு அலைகள் அதிகரித்து வருவதால், கனேடியர்களில் பெரும்பான்மையானவர்கள் இதுவரை தடுப்பூசி பெறாதவர்கள் மீது கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆதரவாக உள்ளனர்.
கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
தடுப்பூசி போடப்படாத மக்கள் மீது அரசாங்கம் மேலும் நடவடிக்கைகளைத் திணிக்க வேண்டும் என்று 67 சதவீதம் பேர் விரும்புவதாகக் தெரிவிக்கப்படுகின்றது.
கருத்துக் கணிப்பில் பங்கு பற்றியவர்களில் கிட்டத்தட்ட பாதி (49 சதவீதம்) பேர் தொற்றுநோயை நீட்டிப்பதற்காக தடுப்பூசி போடாதவர்களைக் குற்றம் சமத்தியுள்ளனர்.