Home இந்தியா தானியங்கி மிதக்கும் வீட்டினை கண்டு பிடித்த விருதுநகர் சிறுமி

தானியங்கி மிதக்கும் வீட்டினை கண்டு பிடித்த விருதுநகர் சிறுமி

by Jey

தானியங்கி மிதக்கும் வீட்டினை கண்டுபிடித்தவிருதுநகர் சிறுமி விஷாலினி 7, க்கு காணொலி மூலம் பிரதமர் மோடி, பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருதுடன் ரூ.1 லட்சம் பரிசு வழங்கி கவுரவப்படுத்தினார்.

மத்திய அரசால் கலை, கல்வி, கலாசாரம், வடிவமைப்பு, புதிய கண்டுபிடிப்பு, துணிச்சல், ஆராய்ச்சி, சமூக சேவை, விளையாட்டு போன்ற துறைகளில் சிறந்து விளங்கும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் (பால சக்தி புரஸ்கார்) விருது வழங்கப்படுகிறது.

ஐதராபாத்தில் உள்ள அத்தாபூர் டில்லி ஸ்கூல் ஆப் எக்ஸலன்ஸில் 2 ம் வகுப்பு படித்து வரும் விருதுநகரை சேர்ந்த பேராசிரியர் நரேஷ்குமார், டாக்டர் சித்ரகலா தம்பதியரின் மகள் விஷாலினி 7, வெள்ள பேரிடர் காலங்களில் உயிர், உடமை காக்கும் வகையில் தானியங்கி மிதக்கும் வீட்டினை கண்டுபிடித்துள்ளார்.

இதில் கியர், கண்காணிப்பு அமைப்புகள், அமர்வதற்கான இருக்கைகள், சிறிய ஆக்ஸிஜன் சிலிண்டர், உணவு பொருட்கள் அடங்கிய பைகள், முதலுதவி பெட்டி, ஜி.பி.எஸ்.வசதி, அவசர அலாரம், மின்சாதனங்கள் இயங்க மின்கலன், சூரிய ஒளி தகடுகள் போன்ற வசதிகள் இடம் பெற்றுள்ளன. இக்கண்டுபிடிப்பிற்காக மத்திய அரசால் இவருக்கு இளைய காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது.

மேலும் நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் மோடி, விஷாலினிக்கு பிரதான் மந்திரி ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது 2022, ரூ. 1 லட்சம் பரிசு தொகைவழங்கி பாராட்டினார்.கலெக்டர் மேகநாதரெட்டி, மாவட்ட சமூக நலன் மகளிர் உரிமைத்துறை அலுவலர் இந்திரா, சிறுமியின் தந்தை நரேஷ்குமார் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

related posts