பிரிட்டிஷ் கொலம்பியாவில் மற்றுமொரு பழங்குடியின சிறுவர்களினது என சந்தேகிக்கப்படும் புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
இந்த புதைழிகளில் சுமார் 93 சிறுவர்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் 93 சிறார்களின் சடலங்கள் இவ்வாறு புதைக்கப்பட்டிருப்பதற்கான சான்றுகள் கிடைக்க் பெற்றுள்ளதாக நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
ஏற்கனவே பழங்குடியின சிறார்களது என சந்தேகிக்கப்படும் பல்வேறு புதைகுழிகள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் வில்லியம்ஸ் லேக் பகுதியின் St. Joseph’s வதிவிடப்பாடசாலை வளாகத்தில் இந்த புதிய அடையாளம் காணப்படாத புதைகுழிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன.
நிலத்தை ஊடறுத்துச் செல்லும் ராடார் கருவிகளைக் கொண்டு இந்த புதைகுழிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.