முக்கிய அதிவேக நெடுஞ்சாலைகளில் வாகன நெரிசல் ஏற்படும் சாத்தியங்கள் வெகுவாக காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இன்றைய தினம் முதல் எதிர்வரும் சனிக்கிழமை வரையில் இவ்வாறு வாகன நெரிசல் நிலையை அவதானிக்க முடியும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலை இலக்கங்களான 400, 426, 403 மற்றும் 401 ஆகியனவற்றில் எதிர்வரும் நாட்களில் கடுமையான வாகன நெரிசல் நிலை உருவாகும் என ஒன்றாரியோ மாகாண பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ட்ரக் வண்டி சாரதிகள் பேரணியாக ஒன்றாரியோவிற்குள் பிரவேசிக்க முயற்சிப்பதனால் இவ்வாறு கடுமையான வாகன நெரிசல் நிலையை எதிர்நோக்க நேரிடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.