Home கனடா கனடாவில் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்வு

கனடாவில் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்வு

by Jey

கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

கடுமையான வெப்பம், வரட்சி நிலைமை, மோசமான வெள்ளம் உள்ளிட்ட காரணிகளினால் உணவு உற்பத்திக்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இதனால் கனடாவில் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடைந்துள்ளன.

கனேடிய புள்ளிவிபரவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் உணவுப்பொருள் விலையேற்றம் பற்றி அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த டிசம்பர் மாதம் உணவுப் பணவீக்கம் 5.2 வீதமாக உயர்வடைந்திருந்தது என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2021ம் ஆண்டில் உலக அளவில் உணவுப்பொருட்களின் விலைகள் உயர்வடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பெருந்தொற்று நிலைமை, ஊழியர் பற்றாக்குறை, காலநிலை காரணிகள் என பல ஏதுக்களினால் இவ்வாறு உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.

related posts