Home உலகம் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திரிக்கையாளர் கொலை

நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திரிக்கையாளர் கொலை

by Jey

மெக்சிகோவில் டிஜுனா நகரில் மூத்த பத்திரிக்கைளார் லூர்து மால்டோநாட் என்பவர் காரில் சென்ற போது மர்ம நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொலை செய்யப்பட்ட மூத்த பத்திரிக்கையாளர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பே தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக அந்நாட்டு அதிபரிடம் புகார் தெரிவித்து வந்திருந்தார். தற்போது அவர் கொலை செய்யப்பட்டுள்ளது பத்திரிக்கையாளர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை நடந்த வருவதாக மெக்சிகோ அதிபர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில்,

மெக்சிகோவில் கடந்த 2000- இருந்து 2021-ம் ஆண்டு வரை 145 பத்திரிக்கையாளர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2 பத்திரிக்கையாளர்கள் கொலை சம்பவம் நடந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நாட்டில் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திரிக்கையாளர் கொலை சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்தும், பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதை வலியுறுத்தியும் நாடுதழுவிய போராட்டங்களை அறிவித்து பத்திரிக்கையாளர்கள் சங்கம் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

related posts