அமெரிக்க – கனேடிய எல்லைப் பகுதியில் அண்மையில் சடலங்களாக மீட்கப்பட்ட இந்திய குடும்பத்தினர் மானிடோபாவிலிருந்து சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
சட்டவிரோதமான முறையில் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முயற்சித்த போது கடும் குளிரில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் குடும்பத்தினர் ஒரு வாரத்திற்கு முன்னர் கனடாவிற்குள் பிரவேசித்து, அங்கிருந்து தரை வழியாக அமெரிக்கா செல்ல முயற்சித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவத்தில் 39 வயதான ஜக்தீஸ் பாடெல், 37 வயதான அவரது மனைவி, 11 வயதான மகள் விஹான்கீ மற்றும் 3 வயதான மகன் தார்மீக் ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.
சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கையாக இது இருக்கும் எனவும் இது தொடர்பில் தீவிர விசாரணை முன்னெடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.