பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
கோவிட் தொற்று தாக்கத்திற்கு உள்ளான நபர் ஒருவருடன் தொடர்பு பேணியதன் காரணமாக அவர் இவ்வாறு தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் இவ்வாறு தொற்று உறுதியான ஒருவருடன் தொடர்பு பேணியதனை அறிந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால் தனிமைப்படுத்திக் கொள்வதாக பிரதமர் ட்ரூடோ டுவிட்டர் பதிவு ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளார்.
தாம் வீட்டிலிருந்தே பணிகளை முன்னெடுக்க உள்ளதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.