Home உலகம் ஈரான் நாட்டில் உயிரியல் பூங்கா பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில்

ஈரான் நாட்டில் உயிரியல் பூங்கா பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில்

by Jey

ஈரான் நாட்டில் உயிரியல் பூங்காவில் பராமரிப்பாளரை கொன்றுவிட்டு உடனிருந்து சிங்கத்துடன் பெண் சிங்கம் ஒன்று தப்பிச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மர்காசி மாகாணம் அராக் நகரில் உள்ள உயிரியல் பூங்காவில் உள்ள 2 சிங்கங்கள் நேற்று திடீரென கூண்டிலிருந்து வெளியேறின. அப்போது பராமரிப்பாளர் சிங்கங்களுக்கு உணவு கொண்டு வந்துள்ளார்.

இந்த நிலையில் கூண்டில் இருந்து வெளியேறிய சிங்கங்களில் பெண் சிங்கம், பராமரிப்பாளரை கடுமையாக தாக்கியது. சிங்கத்தின் தாக்குதலில் பராமரிப்பாளர் உயிரிழக்கவே இரண்டு சிங்கங்களும் அங்கிருந்து தப்பிச் சென்றன.

இதையடுத்து சிங்கங்களை பிடிக்கும் பணியில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர். பூங்கா முழுவதும் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டு, தேடுதல் வேட்டை தொடங்கியது. நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு இரண்டு சிங்கங்களையும் பாதுகாப்பு படையினர் பிடித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

related posts