பிரேசில் நாட்டின் சயோ பலோ மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இதனால், ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில், வெள்ளம், நிலச்சரிவு காரணமாக 5 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், சயோ பலோவில் பெய்துவரும் கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி 24 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இந்த இயற்கை பேரிடரில் சிக்கி 100-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி பலர் மாயமாகியுள்ளதால் அவர்களை தேடும் பணிகள் மீட்புக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.