Home கனடா ட்ரக் பேரணி போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்

ட்ரக் பேரணி போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள்

by Jey

ட்ரக் பேரணி போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் உரிய நடவடிக்கை எடுப்பார்கள் என ஒன்றாரியோ அரசாங்கம் தெரிவித்துள்ளது.

கோவிட் கட்டுப்பாட்டுச் சட்டங்களை எதிர்த்து சிலர் பாரியளவிலான ட்ரக் வண்டி பேரணி போராட்டமொன்றை முன்னெடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் பேரணி றொரன்டோவை அடைந்தால் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மக்களின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையிலான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.

பல்வேறு இடங்களில் போராட்டங்களை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாகவும் இதனை எதிர்கொள்ள பொலிஸார் ஆயத்தமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

related posts