கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிராக கனடாவின் பல நகரங்களில் போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கோவிட் கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டங்கள் தொடர்பிலான 50 சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெரும் எண்ணிக்கையிலான வாகனங்கள் தொடரணியாக ஹோர்ன் ஒலி எழுப்பி பெரும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரதான போராட்டங்களை ஆதரித்து நாட்டின் பல்வேறு நகரங்களிலும் போராட்டங்கள் முனனெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
போராட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் பெரும் எண்ணிக்கையிலான பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.