இந்த நிலையில், விளையாட்டுப் போட்டிகளில் COVID-19 பாதித்துள்ள விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் உணவு ‘சாப்பிட முடியாதது’ என்று ரஷ்ய தடகள வீராங்கனை ஒருவர் குற்றம்சாட்டியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சாப்பிட முடியாத உணவு, விளையாட்டு வீரர்களுக்கு போதுமான உணவு இல்லை மற்றும் பயிற்சி உபகரணங்கள் இல்லாதது போன்ற குற்றச்சாட்டுகள் ஏற்கனவே பெய்ஜிங் விளையாட்டுகள் தொடர்பாக வெளிவந்துள்ளது.
தற்போது, தனிமைப்படுத்தப்பட்ட விளையாட்டு வீரர்கள், நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதற்காக அமைப்பாளர்கள் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
பெய்ஜிங்கில் நடைபெறும் குளிர்கால விளையாட்டுப் போட்டியின் போது COVID-19 பாதிப்பு இருப்பதாக பரிசோதனையில் தெரிய வந்த தடகள வீரர்களில் ஒருவரான ரஷ்யாவின் பயத்லான் போட்டியாளரான வலேரியா வாஸ்னெட்சோவா (Russia’s biathlon competitor Valeria Vasnetsova), இந்த குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.
பெய்ஜிங்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றில் தனக்கு வழங்கப்படும் உணவை புகைப்படம் எடுத்து ப் படத்தைப் பகிர்ந்து கொண்டார் வாஸ்நெட்சோவா. அதில், பாஸ்தா, சில உருளைக்கிழங்குகள், இறைச்சி மற்றும் ஆரஞ்சு சாஸ் ஆகியவை உள்ளன. “ஐந்து நாட்களாக காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு இது” என்று வாஸ்னெட்சோவா கூறினார்.
தனிமைப்படுத்தப்பட்டதிலிருந்து தினமும் அழுதுகொண்டிருப்பதாகவும், சத்தான மற்றும் சரியான உணவு இல்லாததால் அவரது எலும்புகள் வெளியே தெரியத் தொடங்கிவிட்டதாகவும் ரஷ்யர் குற்றம் சாட்டியுள்ளார். தான் மிகவும் சோர்வாக இருப்பதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.
“என் வயிறு வலிக்கிறது, என் கண்களைச் சுற்றி பெரிய கருப்பு வட்டங்கள் உள்ளன. இவை அனைத்தும் முடிவுக்கு வர வேண்டும். நான் தினமும் அழுகிறேன். நான் மிகவும் சோர்வாக இருக்கிறேன்,” என்று வாஸ்னெட்சோவா தனது இன்ஸ்டாகிராமில் எழுதினார்.
வாஸ்நெட்சோவா தனது பதிவில் ஒரு திடுக்கிடும் தகவலை வெளியிட்டார், மேலும் பெய்ஜிங்கில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டல்களில் இருக்கும் சாதாரண விளையாட்டு தொடர்பான பணியாளர்களுடன் ஒப்பிடும்போது, கோவிட்-19 இருக்கும் விளையாட்டு வீரர்களுக்கு குறைவான மற்றும் தரம் குறைந்த உணவு வழங்கப்படுகிறது என்று சொல்கிறார்.
தனிமைப்படுத்தப்பட்ட ஹோட்டலில் தனக்காக விட்டுச்சென்ற உணவை அவளது கதவுக்கு வெளியே எடுக்கும்போது, தனது தாழ்வாரத்தில் உள்ள மற்ற அறைகளுக்கு வெளியே விடப்பட்ட பெட்டிகள் வித்தியாசமாக இருப்பதை அவர் கவனித்திருக்கிறார்.