சமீபத்தில் ராகுல் பேசியதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பிரதமர் இவ்வாறு பேசினார். பார்லி.,யின் இரு சபைகளிலும் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, கடந்த ௨ம் திகதி முதல் விவாதம் நடந்தது.
லோக்சபாவில் நடந்த விவாதத்திற்கு, பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதில் அளித்து பேசியதாவது: என் உரையை துவங்கும் முன், மறைந்த இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு அஞ்சலி செலுத்துகிறேன். அவரது குரலும், பாட்டும் நாட்டை ஒற்றுமைப்படுத்தியது.
நாட்டின் குரலை நாம் இழந்துவிட்டோம்.ஏழைகளுக்கு வீடு ஜனாதிபதி உரை மீதான விவாதத்தில் பங்கேற்று, தங்கள் கருத்துக்களை தெரிவித்த உறுப்பினர்களுக்கு நன்றி. கொரோனா தொற்றுக்குப் பின் உலக நாடுகள் குறித்த பார்வைகள் மாறி வருகின்றன. .
ஆங்கிலேயர்கள் நாட்டை விட்டு சென்றுவிட்டாலும், அவர்கள் விட்டுச் சென்ற பிரிவினை கொள்கையை, காங்கிரஸ் செயல்படுத்தி வருகிறது. ஹெலிகாப்டர் விபத்தில் இறந்த முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத்துக்கு, தமிழக மக்கள் பலரும் நீண்ட வரிசையில் நின்று, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தியதை நான் மறக்கவில்லை.
அவர்களின் தேசபக்திக்கு என் வணக்கங்கள். ஆனால் இதை பாராட்டாமல், தமிழக மக்களின் உணர்வுகளை காங்கிரஸ் புண்படுத்திஉள்ளது. கொரோனா பரவலின் போதும், காங்கிரஸ் அரசியல் கண்ணோடத்துடன் தான் செயல்பட்டது. முதல் அலை பரவிய போது உலகம் முழுதும் பல நாடுகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
முழு உலகமும் மக்களை அவர்கள் இருக்கும் இடத்திலேயே தங்கும்படி கேட்டுக் கொண்டிருந்தது. ஆனால் உத்தர பிரதேசம், பீஹார் மற்றும் மும்பையில் இருந்த புலம்பெயர்ந்த தொழிலாளர்களை, தங்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல காங்கிரஸ் துாண்டி விட்டு மக்களை கஷ்டத்தில் தள்ளியது.
கொரோனா பரவல் காலத்தில் கோடி ஏழை மக்களுக்கு ரேஷன் கடைகளில் இலவசமாக உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. மக்கள் ஒருவர் கூட பட்டினியால் வாடக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.கொரோனாவுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகளை உலக நாடுகள் பாராட்டி வருகின்றன. 95 சதவீதத்திற்கும் அதிகமானோருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.