தமிழில் வாலி, குஷி உள்ளிட்ட பல படங்களை இயக்கிய எஸ்.ஜே.சூர்யா கதாநாயகனாகவும் நடித்து வந்தார். தற்போது அவர் வில்லன் நடிகராக மாறி இருக்கிறார். மகேஷ்பாபுவின் ஸ்பைடர் தெலுங்கு படத்தில் சைக்கோ வில்லனாக மிரட்டினார்.
விஜய்யின் மெர்சல் படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். கடந்த நவம்பர் மாதம் வெளியான மாநாடு படத்தில் எஸ்.ஜே. சூர்யா நடித்த வில்லன் கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.
இந்த படத்தில் வில்லனாக நடிக்க அவர் ரூ.4 கோடி சம்பளம் பெற்றதாக பேசப்பட்டது. இப்போது எஸ்.ஜே.சூர்யாவுக்கு வில்லனாக நடிக்க அதிக வாய்ப்புகள் வருகின்றன.
விஷாலின் 33-வது படமான மார்க் ஆண்டனியில் வில்லனாக நடிக்க எஸ்.ஜே.சூர்யாவை ஒப்பந்தம் செய்துள்ளனர். இந்த படத்தில் நடிக்க அவருக்கு ரூ.5 கோடி சம்பளம் பேசி இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தெலுங்கு படமொன்றில் வில்லனாக நடிக்க தயாரிப்பாளர் ஒருவர் அணுகியதாகவும், அவரிடம் எஸ்.ஜே.சூர்யா ரூ.7 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் பரவி உள்ளது.