Home கனடா ட்ரக் வண்டி போராட்டத்தினால் நாள் தோறும் பொலிஸாருக்கு 2.2 மில்லியன் டொலர் செலவு

ட்ரக் வண்டி போராட்டத்தினால் நாள் தோறும் பொலிஸாருக்கு 2.2 மில்லியன் டொலர் செலவு

by Jey

ட்ரக் போராட்டத்தை நிறுத்த வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

கோவிட் தடுப்பூசி பயன்பாடு உள்ளிட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து பாரிய எண்ணிக்யிலான ட்ரக் வண்டிகளுடன் ஒட்டாவாவில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக போராட்டம் நடத்தப்படும் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெரும் நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றனர்.

ஒட்டாவா போராட்டம் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெற்ற விவாதத்தில் பங்குபற்றி உரையாற்றிய பிரதமர், போராட்டத்தை நிறுத்த வேண்டுமென தெரிவித்துள்ளார்.

இந்தப் போராட்டங்களினால் நாள் ஒன்றுக்கு பொலிஸாருக்கு 2.2 மில்லியன் டொலர்கள் வரையில் செலவாகின்றது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

related posts