ஒன்றாரியோ மாகாணத்தில் வாகன இலக்கத்தகடு ஸ்டிக்கர் நடைமுறை ரத்து செய்யப்படும் சாத்தியங்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு இலக்கத் தகடு நடைமுறை நீக்கப்பட்டால் வாகன உரிமையாளர்கள் ஆண்டுதோறும் 120 டொலர்களை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகின்றது.
பயணிகள் வாகனங்கள் மற்றும் இலகு ரக வர்த்தக ரீதியான வாகனங்கள் என்பனவற்றுக்கான வாகன இலக்கத்தகடு ஸ்டிக்கர்கள் இவ்வாறு ரத்து செய்யப்பட உள்ளது.
எவ்வாறெனினும், இவ்வாறு ஸ்டிக்கர்களை ரத்து செய்வதன் மூலம் வருடாந்தம் அரசாங்கத்திற்கு ஒரு பில்லியன் டொலர்கள் வரையில் செலவாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை ஸ்டிக்கர் நடைமுறை ரத்து செய்வது குறித்த இறுதித் தீர்மானம் எடுக்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.