Home இந்தியா மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணி தோல்வி

மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை மீட்கும் பணி தோல்வி

by Jey

பாலக்காட்டை சேர்ந்தவர் பாபு (வயது28). இவரும் வேறு 3 நண்பர்களும் நேற்று முன்தினம் மலம்புழையில் காட்டுப்பகுதிக்குள் மலையேற சென்றனர். மதியம் பாபு மலையில் இருந்து இறங்கியபோது, பள்ளமான இடத்தில் பாறை இடுக்குகளுக்குள் தவறி விழுந்தார். அவருடன் சென்றவர்கள் அவரை மீட்க முயற்சி செய்தும் முடியவில்லை.

இதை தொடர்ந்து அவர்கள் மலையில் இருந்து இறங்கி மலம்புழை வனத்துறையினரிடம் தகவல் தெரிவித்தனர். தொடர்ந்து, மலை ஏற்ற வீரர்களும், விபத்து பேரிடர் மீட்பு படையினரும் விரைந்து சென்றனர்.

ஆனால் பாபு சிக்கியுள்ள இடத்தை அவர்களால் அடையாளம் காணமுடியவில்லை. இதை தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணி தொடங்கியது. நீண்ட நேரத்திற்கு பின் வாலிபர் பாபு சிக்கியுள்ள இடம் கண்டு பிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை மீட்கும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

இந்தநிலையில், மலை இடுக்கில் சிக்கிய இளைஞரை ஹெலிகாப்டர் மூலம் கடற்படையினர் மீட்க மேற்கொண்ட போது முயற்சி தோல்வியில் முடிந்தது. அதனை தொடர்ந்து இந்திய ராணுவத்தின் உதவியை கேரள அரசு நாடியது.

இதனையடுத்து தகை வெலிங்டன், பெங்களூரில் இருந்து வந்த மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

related posts