ஒன்றாரியோ மளிகைக் கடைகளில் இலவச கோவிட் பரிசோதனை நடாத்தப்பட உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ரெபிட் என்டிஜன் பரிசோதனை நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வாரமொன்றுக்கு தலா ஐந்து மில்லியன் கோவிட் பரிசோதனை தொகுதிகள் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு குடும்பத்திற்கு ஓரு பரிசோதனை தொகுதி வழங்கப்படும் எனவும் அதில் ஐந்து பரிசோதனைகளை செய்யக்கூடிய கருவிகள் உள்ளடக்கப்பட்டிருக்கும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த இலவச கோவிட் பரிசோதனை நடைமுறை குறித்து அரசாங்கம் இன்றைய தினம் அதிகாரபூர்வமாக அறிவிக்கத் திட்டமிட்டுள்ளது