Home உலகம் ஐ.எஸ். சனாவுல்லா கபாரியின் தலைக்கு, அமெரிக்க அரசு 75 கோடி ரூபாய் பரிசு

ஐ.எஸ். சனாவுல்லா கபாரியின் தலைக்கு, அமெரிக்க அரசு 75 கோடி ரூபாய் பரிசு

by Jey

ஆப்கனில் இயங்கும் ஐ.எஸ்., – கொராசன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சனாவுல்லா கபாரி குறித்து ரகசிய தகவல் தருவோருக்கு, 75 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல். இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில், 2021 ஆக., 26ல் ஐ.எஸ்., – கொராசன் பயங்கரவாத அமைப்பு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 13 பேர் உட்பட, 185 பேர் பலியாகினர்.

இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட சனாவுல்லா கபாரியின் தலைக்கு, அமெரிக்க அரசு 75 கோடி ரூபாய் பரிசு அறிவித்துள்ளது.

அதன் விபரம்: கடந்த, 2020 ஜூனில், ஆப்கனில் ஐ.எஸ்., – கொராசன் பயங்கரவாத அமைப்பின் தலைவராக, அல் – முஹாஜிர் எனப்படும் சனாவுல்லா கபாரி நியமிக்கப்பட்டார். அவர் பயங்கரவாத செயல்களுக்கு நிதி திரட்டுவது, தற்கொலை படை தாக்குதல் நடத்துவதில் ஈடுபட்டு வருகிறார்.

காபூல் விமான நிலைய தாக்குதலுக்கு காரணமான இவர் பற்றி துப்பு கொடுப்போருக்கு, 75 கோடி ரூபாய் வழங்கப்படும். ‘சிக்னல், வாட்ஸ் ஆப், டெலிகிராம்’ வாயிலாக சனாவுல்லா குறித்து தகவல் அளிக்கலாம். துப்பு தருவோரின் விபரங்கள் ரகசியமாக வைக்கப்படும். இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

related posts