பிரிட்டனில் கொரோனா கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டதை அடுத்து, எரிவாயுவிற்கான தேவை அதிகரிப்பால், அதன் விலை வரலாறு காணாத அளவிற்கு உயர்ந்துள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனில், கொரோனா பரவல் காரணமாக, இரண்டு ஆண்டுகளாக ஊரடங்கு உள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் தொழில் துறை முடங்கியது.
தேவை மற்றும் சப்ளை குறைந்தது.
இந்நிலையில் கொரோனா கட்டுப்பாடுகள் லேசாக தளர்த்தப்பட்டதை அடுத்து, மக்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. குறிப்பாக, விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா துறைகளில் எரிவாயு பயன்பாடு உயர்ந்துள்ளது.
இதன் காரணமாக, 2021 துவக்கத்தில் இருந்ததை விட எரிவாயுவின் விலை, வரலாறு காணாத வகையில் 300 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதனால் இந்தாண்டு பிரிட்டன் குடும்பங்களில், எரிவாயு, மின்சாரம் உள்ளிட்ட எரிசக்தி பயன்பாட்டிற்கான செலவு உயரும் என,மதிப்பிடப்பட்டுள்ளது.சராசரியாக ஒரு குடும்பத்தின் எரிசக்தி செலவினத்தில், 70 ஆயிரம் ரூபாய் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.