பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு, ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வந்த, இந்திய பழம்பெரும் பாடகி லதா மங்கேஷ்கர், 92, கடந்த 6ம் திகதி காலமானார்.
திரை இசைத் துறையில் 25 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை அவர் பாடி உள்ளார்.
அவருடைய மறைவுக்கு ஐ.நா., சபைபொதுச் செயலர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:இந்திய துணை கண்டத்தின் குரலாக அறியப்படும் லதா மங்கேஷ்கரின் மறைவால் வாடும் அவரது குடும்பத்திற்கும், இந்திய மக்களுக்கும் என் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
கல்லுாரிக்கு லதா பெயர்
மஹாராஷ்டிர தலைநகர் மும்பையில், இசைக் கல்லுாரி ஒன்றை கட்டமைக்கவும், அதற்கு லதா மங்கேஷ்கரின் பெயரை சூட்டவும், மாநில அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அதன்படி, அந்த இசைக் கல்லுாரிக்கு, ‘பாரத ரத்னா லதா தீனநாத் மங்கேஷ்கர்’ என பெயர் சூட்டப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2222