ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடெட்டின் கடன் மோசடியால் நாட்டின் பல முக்கிய வங்கிகள் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த மோசடியின் காரணமாக ஐசிஐசிஐ வங்கியும், ஐடிபிஐ வங்கியும் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ஐபிஓவின் கீழ் வரும் எல்ஐசியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடியைப் பற்றி முதன்முதலில் ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ) எச்சரித்தது.
அறிக்கையின்படி, எஸ்பிஐ, ஏபிஜி ஷிப்யார்ட் லிமிடட் , கார்பரேட் காரண்டர் ஏபிஜி ஷிப்யார்ட் இண்டர்நேஷனல் பிரைவேட் லிமிடட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ரிஷி கமலேஷ் அகர்வால், நிர்வாக இயக்குனர் சந்தானம் முத்தசாமி, இயக்குநர் சுஷில் குமார் அகர்வால் ஆகியோரை பெயரிட்டுள்ளது. புகாரில் அடையாளம் தெரியாத நபர்கள் மற்றும் பொது ஊழியர்களைத் தவிர அஷ்வினி குமார் (அனைவரும் மும்பையை சேர்ந்தவர்கள்), ரவி விமல் நெவேடியா (புனே) ஆகியோரது பெயர்களும் உள்ளன.
ஏபிஜி ஷிப்யார்ட் நிறுவனம் மூலம் செய்யப்பட்டுள்ள மோசடியில் மிக அதிகமாக ஐசிஐசிஐ வங்கியில் ரூ.7,089 கோடி மோசடி நடந்துள்ளது. இதைத் தொடர்ந்து, ஐடிபிஐ வங்கி லிமிடெட் இரண்டாவது இடத்தில் உள்ளது, இதில் ரூ.3,639 கோடி மோசடி செய்யப்பட்டுள்ளது. எஸ்பிஐ ரூ.2,925 கோடியுடன் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது.
எல்ஐசி ஐபிஓ குறித்து வணிக சந்தையே பரபரப்பாக இருக்கும் நிலையில், நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமும் ரூ.136 கோடி மோசடியை சந்தித்துள்ளதாக கூறப்படுகின்றது. இதை குறிப்பிட்டுக் காட்டி, எஸ்பிஐ (மேலே உள்ள) ஏபிஜிஎஸ்எல் அதிகாரிகள் மீது ‘குற்றச் செயல்களில்’ ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டியுள்ளது.
ஏபிஜிஎஸ்எல் மற்றும் அதிகாரிகளின் துணையுடன் இந்த மோசடி நடந்தது
ஆகஸ்ட் 25, 2020 தேதியிட்ட சிபிஐக்கு அளிக்கப்பட்ட முதல் புகாரில், “குற்றம் சாட்டப்பட்டவர்கள் (ஏபிஜிஎஸ்எல் மற்றும் அதன் அதிகாரிகள்) இணைந்து பல குற்றச் செயல்களைச் செய்துள்ளனர்.” என்று எஸ்பிஐ கூறியது. எனினும், விசாரணையின் போது, சில அறியப்படாத நபர்கள் மற்றும் பொது ஊழியர்களும் விசாரிக்கப்படலாம் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், “வங்கிக்கு (எஸ்பிஐ ) குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் செய்த மோசடியில், எங்கள் ஊழியர்களுக்கு தொடர்பு இருப்பதாக சந்தேகமில்லை. எந்தவொரு பொதுவான சதியும் வங்கிக்குள் நடந்ததாக எங்களுக்கு சந்தேகம் இல்லை” என்றும் வங்கி கூறியுள்ளது.