Home இந்தியா தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க, மம்தா பானர்ஜி முயற்சி

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க, மம்தா பானர்ஜி முயற்சி

by Jey

பா.ஜ., அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்களுடன் பேசி, புதிய கூட்டணியை உருவாக்க, திரிணமுல் காங்., தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி ஈடுபட்டுள்ளார். ஆனால், இதில் காங்.,கை சேர்க்க அவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தேசிய அளவில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை அமைக்க, மம்தா பானர்ஜி முயன்று வருகிறார்.
இது தொடர்பாக, பல மாநிலக் கட்சித் தலைவர்களுடனும், தேசிய அளவிலான எதிர்க்கட்சித் தலைவர்களுடனும், அவர் ஏற்கனவே பேசியுள்ளார்.
காங்., தற்காலிக தலைவர் சோனியா, முன்னாள் தலைவர் ராகுல் உள்ளிட்டோரையும் அவர் சந்தித்து பேசினார். ஆனால், அதில் பெரிய அளவில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதற்கிடையே, ‘இந்தக் கூட்டணி காங்., தலைமையில் அமைய வேண்டும்’ என, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் கூறியுள்ளனர்.இந்நிலையில், மேற்கு வங்க கவர்னர் ஜக்தீப் தன்கருடன், மம்தா பானர்ஜி மோதல் போக்குடன் உள்ளார். தமிழகத்திலும், கவர்னர் ரவிக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் போர்க்கொடி துாக்கி

உள்ளார்.மேற்கு வங்க சட்டசபையை முடக்குவதாக, கவர்னர் ஜக்தீப் தன்கர் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தார். இந்த விவகாரத்தில், கவர்னர் ஜக்தீப் தன்கரை விமர்சித்து, சமூக வலை தளத்தில் ஸ்டாலின் செய்தி வெளியிட்டார்.
அதற்கு, மாநில அரசின் பரிந்துரையின்படியே சட்டசபை முடக்கப்பட்டதாக, கவர்னர் ஜக்தீப் தன்கர் பதில் கொடுத்திருந்தார்.இதற்கிடையே, தெலுங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ் மற்றும் ஸ்டாலினுடன், மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் தொலைபேசியில் பேசினார்.

அப்போது, பா.ஜ., வைத் தவிர்த்து, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதல்வர்கள் கூட்டத்தை நடத்துவது குறித்து விவாதிக்கப்பட்டது.இந்நிலையில், கோல்கட்டாவில் நேற்று நடந்த ஒரு நிகழ்ச்சியில், மம்தா பானர்ஜி பேசியதாவது:
கூட்டாட்சி கட்டமைப்பு சிதைக்கப்பட்டு வருகிறது. இதை எதிர்த்து, அனைத்து எதிர்க்கட்சி களின் முதல்வர்களுடன் இணைந்து, புதிய கூட்டணியை அமைக்க உள்ளோம்.

ஏற்கனவே, வலுவான கூட்டணியை அமைக்க வரும்படி, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தேன். ஆனால், அவர்கள் முன் வரவில்லை.
காங்கிரசுடன் எந்த மாநிலக் கட்சியும் நட்புடன் இல்லை. அதனால், அவர்கள் தங்களுடைய தனி வழியில் பயணிக்கட்டும்.இவ்வாறு அவர் பேசினார்.இதன் வாயிலாக, எதிர்க்கட்சிகள் கூட்டணியில் காங்.,கை சேர்ப்பதற்கு, மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்துள்ளது தெளிவாகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில், காங்.,குடன், தி.மு.க., கூட்டணி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

related posts