Home உலகம் ‘அடாப்டிவ் டிரைவிங் பீம் ஹெட்லைட்ஸ்’ என்ற முகப்பு விளக்கு….

‘அடாப்டிவ் டிரைவிங் பீம் ஹெட்லைட்ஸ்’ என்ற முகப்பு விளக்கு….

by Jey

எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத உயர் தொழில் நுட்ப முகப்பு விளக்கை வாகனங்களில் பொருத்த அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

இதுகுறித்து, அமெரிக்க நெடுஞ்சாலை பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:வாகனங்களில் பயன்படுத்தப்படும் முகப்பு விளக்குகளில் அதீத ஒளியால் எதிரில் வரும் வாகன ஓட்டிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தி விபத்துகளையும் ஏற்படுத்துகிறது. இதையடுத்து பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டன.

தற்போது, ‘அடாப்டிவ் டிரைவிங் பீம் ஹெட்லைட்ஸ்’ என்ற முகப்பு விளக்கு மிகவும் பாதுகாப்பானதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. உயர் தொழில் நுட்பத்தில் தயாரிக்கப்படும் இந்த முகப்பு விளக்குகள், எதிரில் வரும் வாகனத்தின் முகப்பு விளக்கு ஒளிக்கு ஏற்றவாறு தானாகவே தன் வெளிச்சத்தை மங்கலாக்கிக் கொள்ளும் என்பதால், எதிரில் வரும் வாகன ஓட்டிகளின் கண்களை கூசச் செய்யாது.

இதனால் விபத்துகள் தவிர்க்கப்படும். இந்த முகப்பு விளக்கை பயன்படுத்த நெடுஞ்சாலை பாதுகாப்பு கட்டுப்பாட்டு துறை ஒப்புதல் அளித்து விட்டது. இதுகுறித்து அடுத்த சில நாட்களில் அரசு அறிவிப்பு வெளியாகும். இதைத் தொடர்ந்து, இந்த விளக்கு பயன்பாட்டுக்குவரும்.இவ்வாறு அவர் கூறினார்.

related posts