Home இலங்கை நாட்டை கட்டியெழுப்பது தொடர்பாக அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதியில் நம்பிக்கையில்லை

நாட்டை கட்டியெழுப்பது தொடர்பாக அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதியில் நம்பிக்கையில்லை

by Jey

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உட்பட ராஜபக்ச குடும்பத்தின் முக்கியஸ்தர்கள் வழிநடத்தி வரும் தற்போதைய அரசாங்கம் தொடர்பான புதிய கருத்து கணிப்பு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த கருத்து கணிப்பின் முடிவுகளுக்கு அமைய பெரும்பாலான மக்கள் அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொள்கைகள் தொடர்பான கற்கை கேந்திர நிலையம் இந்த கருத்து கணிப்பை நடத்தியுள்ளது. சில துறைகள் உள்ளடங்கும் வகையில் இந்த கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

மக்கள் தற்போது எதிர்நோக்கி வரும் பிரதான பிரச்சினைகள் என்ன?.தற்போதைய அரசாங்கத்தின் இரண்டு ஆண்டு ஆட்சிக்காலத்தில் மக்களின் வருமானத்தில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா?

நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பிரச்சினைகளில் இருந்து நாட்டை அரசாங்கத்தினால், கட்டியெழுப்ப முடியுமா? ஆகியன முக்கிய விடயங்களாக முன்வைக்கப்பட்டு கருத்து கணிப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த கருத்து கணிப்பில் மக்கள் வழங்கியுள்ள பதில்கள்

கேள்வி 01 மக்கள் தற்போது மக்கள் எதிர்நோக்கி உள்ள பிரதான பிரச்சினை என்ன?.

பதில்

1 கோவிட் தொற்று நோயை முடிவுக்கு கொண்டு வந்தமை- 30.3 வீதம்.

2 வாழ்க்கை செலவு கட்டுப்பாடு – 26.1 வீதம்.

பொருளாதார வளர்ச்சி – 25.9 வீதம்.

இதனடிப்படையில், 56.8 வீதமானோர் பொருளாதார நெருக்கடி அடிப்படையாக உள்ளது எனக் கூறியுள்ளனர்.

கேள்வி 02 கோட்டாபய, மகிந்த மற்றும் பசில் ஆட்சி நிர்வாகத்தில் மக்கள் வருமான மட்டம் தொடர்பான பிரச்சினை

பதில்

1 வருமானம் மிக சிறப்பாக உள்ளது -0.6 வீதம்.

2 வருமானம் ஓரளவுக்கு சிறப்பாக உள்ளது 7.6 வீதம்.

3 வருமான நிலைமையில் மாற்றமில்லை -16.3 வீதம்

4 வருமானம் ஓரளவுக்கு மோசமாகியுள்ளது -31.5 வீதம்.

5 வருமானம் பெரியளவில் மோசமடைந்துள்ளது -43.7 வீதம்.

இந்த பதில்கள்களின் அடிப்படையில் 75.2 வீதமானோர் வருமானம் மோசமடைந்துள்ளது எனக் கூறியுள்ளனர்.

கேள்வி 03 நாட்டின் தற்போதைய மோசமான நிலையில் இருந்து அரசாங்கத்தினால், நாட்டை கட்டியெழுப்ப முடியுமா?

பதில்

1 கட்டியெழுப்ப முடியும் -4.9 வீதம்.

2 அரசாங்கம் முன்வைத்துள்ள திட்டங்களை நம்ப முடியும் -26.11 வீதம்.

3 நாட்டை கட்டியெழுப்ப முடியும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி மீது அந்தளவுக்கு நம்பிக்கையில்லை-23.2 வீதம்.

4 கடும் நிச்சயமற்ற நிலை -40.9 வீதம்.

இந்த பதில்களின் அடிப்படையில், நாட்டை கட்டியெழுப்பது தொடர்பாக அரசாங்கம் வழங்கியுள்ள வாக்குறுதியில் நம்பிக்கையில்லை என 64.1 வீதமானோர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

related posts