தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் திரைப்படங்களை தயாரித்து பல திறமையான நட்சத்திரங்களை ஊக்குவித்து வருகிறார். அவரது அடுத்த தயாரிப்பை அவரது உதவியாளர் பொன்குமார் இயக்கவுள்ளார். பொன்குமாரின் கதையால் கவரப்பட்ட ஏ.ஆர்.முருகதாஸ் இப்படத்தை தயாரிக்க முன் வந்துள்ளார். லீட் ரோலில் நடிகர் கவுதம் கார்த்திக் நடிக்கிறார்.
அதேநேரத்தில் இயக்குநருக்கான பணியிலும் ஏ.ஆர்.முருகதாஸ் கவனம் செலுத்தி வருகிறார். அனைவரும் ரசிக்கக்கூடிய வகையில், அனிமேஷன் திரைப்படத்தை இயக்க உள்ள முருகதாஸ், உலகத் தரத்தில் அப்படம் இருக்க வேண்டும் என்பதை இலக்காக கொண்டுள்ளார். சோனி பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவுப்பு விரைவில் வெளியாகிறது.
அவருக்கு ஏற்ற கதைக்களமாக படம் இருப்பதால், உடனடியாக கவுதம் கார்த்திக் சம்மதம் தெரிவித்துள்ளார். விரைவில் தயாரிப்பாளர் முருகதாஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஹீரோயினாக புதிய அறிமுக நடிகை ஒருவர் நடிக்க உள்ளார். எளிமையாக பூஜை நடத்தப்பட்டு படப்பிடிப்புகளை தொடங்க இயக்குநர் பொன்குமார் மற்றும் தயாரிப்பாளர் முருகதாஸ் முடிவெடுத்துள்ளனர். விரைவில் படப்பிடிப்புகள் தொடங்க உள்ள நிலையில், அதற்கான முன் தயாரிப்புகளான தொழில்நுட்ப அணி, கேமரா உள்ளிட்ட கலைஞர்கள் தேர்வுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
பூஜைக்கு முன்பாக அனைத்து கலைஞர்கள் பெயரும் இறுதி செய்யப்பட்டு அறிவிக்கப்பட உள்ளது. ஏற்கனவே கௌதம் கார்த்திக்கை நாயகனாக வைத்து ‘ரங்கூன்’ படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்திருந்தார். அந்தப் படத்தையும் முருகதாஸிடம் அசோசியேட்டாக இருந்த ராஜ்குமார் பெரியசாமி இயக்கியிருந்தார்.