Home கனடா அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

அரசாங்க எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேர் கைது

by Jey

அரசாங்கத்திற்கு எதிராக ஒட்டாவாவில் நடைபெற்று வரும் போராட்டத்தில் ஈடுபட்ட 100 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

20க்கும் மேற்பட்ட வாகனங்களை பொலிஸார் இழுத்துச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவின் பல்வேறு பகுதிகளிலும் கடந்த மூன்று வாரங்களாக கொரோனோ சட்டங்கள் கட்டுப்பாடுகளை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பொலிஸார் ஒலிபெருக்கிகள் மூலம் போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர்.

பல்வேறு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் பொலிஸார் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்களை கைது செய்துள்ளனர்.

related posts