அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லா விமானம் மற்றும் அதனை இயக்குவது தொடர்பான பயிற்சி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 5-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது.
ஆளில்லா, கட்டுப்பாடற்ற-ஆளில்லா விமான புரட்சியின் செயல்பாடுகளை உணர்த்துவது’ என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெறும். இதில் 2 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த கண்காட்சியில் 26 நாடுகளைச் சேர்ந்த 134-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் முதல் முறையாக இஸ்ரேல், செர்பியா, ஆஸ்திரியா, பல்கேரியா, மால்டா, துருக்கி மற்றும் பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன.
ஆளில்லா விமானம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள், நவீன உத்திகள், பாதுகாப்பு சவால்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக நடைபெறும் கருத்தரங்கில் விவாதிக்கப்படும். இந்த கருத்தங்கில் 150-க்கும் மேற்பட்ட வல்லுனர்கள் பங்கேற்கின்றனர்.