ஐரோப்பிய நாடான பிரிட்டனின் ராணி இரண்டாம் எலிசபெத், 95, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பிரிட்டன் இளவரசர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோருக்கு இம்மாத துவக்கத்தில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது; இருவரும் அரண்மனையிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
இந்நிலையில், ராணி இரண்டாம் எலிசபெத்துக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், ராணிக்கு லேசான அறிகுறிகள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, அவருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. விரைவில் வழக்கமான பணிகளில் அவர் ஈடுபடுவார் என பகிங்ஹாம் அரண்மனை கூறியுள்ளது.