உக்ரேய்ன் மீது ரஸ்யா மேற்கொண்ட தாக்குதல்களுக்கு கனேடிய அரசாங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது.
உக்ரேய்னிலிருந்து ரஸ்யா தனது படையினரை வாபஸ் பெற்றுக்கொள்ள வேண்டுமென கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ கோரியுள்ளார்.
உக்ரேய்ன் மீது நடாத்தப்பட்ட தாக்குதல்களை கனடா மிக வன்மையாக கண்டிப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரஸ்யாவின் நடவடிக்கைகளுக்கு கடுமையான எதிர்வுவிளைவுகளை சந்திக்க நேரிடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உக்ரேய்னின் பௌதீக ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் ரஸ்யா மதித்து செயற்பட வேண்டுமென கோரியுள்ளார்.