Home இந்தியா ஸ்மார்ட் போன் தேவை வருகிற 2026-ம் ஆண்டில் 40 கோடியாக உயரும்

ஸ்மார்ட் போன் தேவை வருகிற 2026-ம் ஆண்டில் 40 கோடியாக உயரும்

by Jey

2021-ம் ஆண்டில் 30 கோடியாக இருக்கும் ஸ்மார்ட் போன் தேவை வருகிற 2026-ம் ஆண்டில் 40 கோடியாக உயரும் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 5ஜி வெளியீட்டிற்கு பிறகு ஸ்மார்ட் போன்களின் ஏற்றுமதி 2026-ம் ஆண்டில் 13.5 கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராமப்புறங்களில் ஏற்பட்டு வரும் இணையத்தின் தாக்கம் மற்றும் நவீன வளர்ச்சிகளால் வருகிற 2026-ம் ஆண்டிற்குள் இந்தியாவில் சுமார் 100 கோடி பேர் ஸ்மார்ட் போன் பயனர்களாக இருப்பார்கள் என்று டிலாய்ட் நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. 2021-ம் ஆண்டின் கணக்கின்படி, இந்தியாவில் சுமார் 120 கோடி மக்கள் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதில் சுமார் 75 கோடி பேர் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள்.

அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியா உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஸ்மார்ட் போன் உற்பத்தி செய்யும் நாடாக மாற இருக்கிறது. மத்திய அரசின் பாரத் நெட் திட்டத்தின் கீழ் 2025-ம் ஆண்டிற்குள் அனைத்து கிராமப்புறங்களையும் பைபர் மயமாக்கும் முயற்சி கிராமப்புறங்களில் இணைய பயன்பாட்டினை அதிகரித்து இணைய அடிப்படையிலான சாதனங்களின் எழுச்சிக்கு ஊக்கமளிக்கும்.

மேலும் அந்த அறிக்கையின் படி, 2022-ம் ஆண்டு முதல் 2026-ம் ஆண்டுக்குள்ளாக சுமார் 170 கோடி ஸ்மார்ட் போன்கள் வரை ஏற்றுமதி செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சுமார் 25 ஆயிரம் கோடி டாலர் சந்தையை உருவாக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் கிட்டதட்ட 84 கோடி 5ஜி சாதனங்கள் இந்த 5 ஆண்டுகளுக்குள்ளாக விற்பனையாகும் என்றும் கூறப்படுகிறது.

 

related posts